யாழில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் உடல்களை விறகுகளை பயன்படுத்தி தகனம் செய்வதற்கு அனுமதி!

0

நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது.

இதன் பிரகாரம் குறித்த தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை விறகுகளை பயன்படுத்தி தகனம் செய்வதற்கு யாழில் அனுமதியை கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று மாவட்ட செயலாளர் மாவட்ட கொவிட் ஒழிப்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த சில நாட்களாக யாழ் உள்ளிட்ட வட மாகாணத்தில் கொவிட் மரணங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த உடல்களை தகனம் செய்வதற்கு நிலையம் தொடர்ச்சியாக இயங்கி வருவதால் மேலதிக உடல்களை தகனம் செய்வதற்கு இடப் பற்றாக்குறை நிலவுகிறது.

மேலும் இந்தியாவின் மேற்கொண்டது போல விறகினை பயன்படுத்தி அந்த உடலைத் தகனம் செய்வதற்கு யோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply