zoom ஊடாக கொவிட் தொற்று பரவலுக்கு ஆயுர்வேத வைத்தியர்களிடமிருந்து அறிவுறுத்தல் பெறுவதற்கான திட்டம்

0

நாட்டில்சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் 19 தொற்று நிலையினைக் கருத்திற்கொண்டு ஹோமாகம பிரதேச செயலகத்தின் அதிகார பிரிவிற்குட்பட்ட கொவிட் தொற்றாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாரிய சிக்கல்களுக்கு தொழில் காணொளி ஊடாக ஆயுர்வேத வைத்தியர்களிடமிருந்து அறிவுறுத்தல் பெறுவதற்கான வேலை திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களின் உதவிகளை பெறுவது தற்போது கடினமாக காணப்படுவதால் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் பணியாற்றும் கிராம சேவகர் பிரிவில் உள்ள கொவிட் நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

Leave a Reply