இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் ஒரு தொகை சீனி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலையொன்று நுகர்வோர் விவகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் அரசின் கீழ் பதிவு பெற்றுள்ள போதிலும் சட்டவிரோதமாக சீனியர் களஞ்சியப் படுத்தி வைத்திருந்த காரணத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த களஞ்சியசாலையினுள் சுமார் 1,800 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்படதாக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட சீனியைசதொசாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



