திருகோணமலை சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

0

திருகோணமலை மாவட்டத்தில் செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் கடந்த (06)வெளியிடப்பட்ட நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 10 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 276 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும்,156 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வயது தொடக்கம் ஐந்து வயது வரை 164 சிறார்களும், 65 வயதுக்கு மேற்பட்ட 427 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 9 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பகுதியில் 2419 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் பதவிசிறிபுர பகுதியில் 209 பேரும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 359 பேரும்,குச்சவெளியில் 1141 பேரும்,உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 1794 தொற்றாளர்களும், மூதூரில் 1439 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிண்ணியாவில் 645 பேரும்,குறிஞ்சாங்கேணியில் 441 ஒரு பேரும், கந்தளாயில் 1263 பேரும், தம்பலகாமத்தில் 647 பேரும், சேறுவில பிரதேசத்தில் 242 பேரும், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் 62 பேரும் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply