நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய இன்னல்களை ஏற்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சடலங்கள் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான மின் தகன சாலையிலேயே தகனம் செய்யப் படுகின்றன.
இருப்பினும் அது பழுதடைந்த நிலையில் உள்ளதால் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக புதிய மின் தகன சாலையை அமைப்பதற்கான சாத்தியமில்லை எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டிருந்தார்.



