தனியார் துறையின் மொத்த விற்பனையாளர்களுக்கு சீனி விநியோகிக்க நடவடிக்கை!

0

தனியார் துறையின் மொத்த விற்பனையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழ் உள்ள உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களம் ஊடாக
சீனி விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய உள்ளூர் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை சீனி ஒரு கிலோ 117 ரூபாவுக்கும், சிவப்பு சீனி ஒரு கிலோ 120 ரூபாவுக்கும் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்களை 0113681797 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம் தகவலை அறிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply