மட்டக்களப்பு மாவடிடம் காத்தாங்குடி பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்படுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளாந்தம் போதைப் பொருளுடன் 20 பேருக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



