திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 96 ம் கட்டை பகுதியில் இரு வருடங்களுக்கு முன்னர் அமையப்பெற்ற சதொச விற்பனை நிலையம் மூடப்பட்டதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் காரணமாகவும் சில்லறை கடைகளில் பொருள் இல்லாமை காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
சீனியின் விலை 220 ரூபா வரை அதிகரித்துள்ளது இதனை சதொச விற்பனை நிலையத்தில் 130 ரூபா உள்ள நிலையில் இங்குள்ள சதொசாவை மூடியதன் காரணமாக அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலையும் உயர்ந்துள்ளது .
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டங்களை எதிர்நோக்கவேண்டியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரு வருடங்களுக்கு முன்னர் சதொச விற்பனை நிலையம் இருந்தும் அதனை மூடியதன் மர்மம்தான் என்ன என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
சதொசா நிலையத்துக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் சுமார் 30 கிலோமீற்றர் திருகோணமலை நகருக்கு செல்ல நேரிடுவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த பகுதிக்கு சதொச விற்பனை நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



