திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவிற்குடபட்ட
கிரீன் வீதியில் பிளாஸ்டிக் கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைக்குண்டுகள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து நேற்று மாலை கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நீதிமன்றத்தில் காணி தொடர்பில் அதிக அளவில் வழக்குகள் பேசக்கூடிய சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்கு முன்னால் இந்த குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலை நகர சபையின் சுத்திகரிப்பு தொழிலாளிகள் அந்தப் பகுதியை சுத்தப்படுத்தும் போது பிளாஸ்டிக் கேன் இருப்பதை அவதானித்த போதிலும் குறித்த பிளாஸ்டிக் கேனை காலால் உதைத்து விட்டு குப்பையை மாத்திரம் சுத்தப்படுத்தும் காட்சி சிசிடி கானொலி மூலம் கண்டறிய பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் இந்த கைக்குண்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றவுடன் கைக்குண்டை செயலிழக்கச் செய்ய உள்ளதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவ இடத்திற்கு திருகோணமலை தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் துறைமுக காவற்துறையினர் இணைந்து விசாரணைகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.



