தமிழ் மக்கள் அனைவருக்குமே மிகப் பிடித்த நடிகராக விளங்குபவர் நடிகர் விஜயகாந்த்.
இவர் எப்போதும் மக்கள் மீது அக்கறை கொண்டவராகவும், நாட்டுப் பற்று மிகுந்தவர் ஆகவே காணப்படுவார்.
அத்துடன் அவரது படங்களே அவர் எப்படிப்பட்டவர் என்பதை பிரதிபலிக்கும்.
இந்நிலையில் மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அரசியலில் கால் பதித்து நல்லது செய்ய நினைத்தார்.
நடிகர் விஜயகாந்த் அவர்களின் அரசியல் பலம் ஆரம்பத்தில் மிகவும் நன்றாக இருந்தாலும் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் அதில் அவரால் அதிக ஈடுபாடு காட்ட முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் உடல் நலம் குன்றிய காரணத்தால் அவர் வீட்டிலேயே உள்ளார்.
அவ்வப்போது அவர் சில காரணங்களுக்கு மாத்திரமே வெளியில் வருவார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக திடீரென அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



