யாழில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

0

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உள்ளடங்கலாக ஐவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும், நெல்லியடியில் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகத்தில் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளனர்.

இதன் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply