இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாளை கிடைக்கப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளே இவ்வாறு நாளை கிடைக்க பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் இதுவரையில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் அவர்களில் 25 ஆயிரத்து 489 பேர் இரண்டாவது தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வாறு நாளை வரும் தடுப்பூசிகள் கண்டி மாவட்த்திற்கு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



