நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் சுகதர சேவையாளர்கள் பாதுகாப்பற்று நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய சுகதர சேவையாளர்களுக்கு என உரிய வேலைத் திட்டமொன்று இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சுகதர சேவையில் பணியாற்றும் ஒருவர் உயிரிழந்தால் அவரின் கணவனின் அல்லது மனைவியின் அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான உதவி ஊழியர்கள் இதுவரைகாலமும் பணி நிரந்தரமாக்கப்படாதுள்ளனர்.
மேலும் சுகாதார சேவையை வழங்கும் குறித்த நபர்கள் ஏதாவது ஒரு வகையில் மரணித்தால் அவர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று சுகாதாரத்துறையினறால் பெற்றுக்கொடுக்க வேண்டும் என குடும்ப நல சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருந்தார். வேண்டும்



