ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இலங்கை மருந்தாக்கள் கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சைனோ பார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு நன்கொடையாக கிடைக்க பெற்ற மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட சைனோ பார்ம் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 15.7 மில்லியனாக அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



