கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்கு என தனிப்பட்ட வைத்திய அறைகள்!

0

கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்கு என பல வைத்தியசாலைகளில் தனியான வைத்திய அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கர்ப்பிணி தாய்மார்கள் எந்த ஒரு வகையிலும் அச்சம் கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுவரை காலம் 3,800 கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று உறுதியானதுடன் அவர்களில் 850 பேர் வரையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சில கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டில் வைத்து தனிமைப்படுத்த பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply