கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் நேற்றைய தினம் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் இருவர் வவுனியாவைச் சேர்ந்த என்றும் ஏணைய இருவரும் விசுவமடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



