இந்தியாவில் கொவிட் தொற்றின் இரண்டாவது அலை தாக்கியதை அடுத்து உலகின் பல நாடுகளும் இந்தியாவுடனான போக்குவரத்துகளை இடைநிறுத்தியது.
இந்நிலையில் குவைத் நாடும் பயணிகள் விமான போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடை நிறுத்தியது.
அத்துடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
குவைத் தடை விதித்ததால் குறித்த போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடர்வதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போட்டு நாடுகளுக்கான போக்குவரத்துக்களையும் நிறுத்தியிருந்தது.
தற்போது குறித்த போக்குவரத்து சேவையினை மீண்டும் தொடங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.



