நாடாளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

0

கொவிட் 19 தொற்று பரவல் நிலை காரணதினால் நாடாளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் என்பன தற்போது மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகள சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடாளுமன்றில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் தற்காலிகமாக உணவுகளையும் வெளியிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியில் இருந்து எடுத்து வரும் உணவு பொதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை சோதனைக்கு உட்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்மையில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply