மேல் மாகாணத்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் விசேட சேவை!

0

கொவிட் 19 நோயாளர்களின் நோய்த்தன்மைக்கு ஏற்ப மேல் மாகாணத்தில் அவர்களை வகைப்படுத்தி உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக புதியமுறை ஒன்று கொவிட் தடுப்புக்கான தேசியத் செய்யற்பட்டு மையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்றைய தினம் முதல் துரித அழைப்பு மற்றும் குறுந்தகவல் சேவை முறை ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் நோயாளிகள் கீழ் வரும் தகவல்களை உள்ளீடு செய்யது 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவலை அனுப்பி வைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுவாச கோளாறுகளை கொண்டுள்ள நோயாளர்கள்A எனவும் காய்ச்சல் கொண்டுள்ள நோயாளர்கள் B எனவும் எந்தவிதமான நோய் அறிகுறிகளையும் கொண்டிராத நபர்கள் C எனவும் குறிப்பிட்டு சிறிய இடைவெளியை விட்டு வயது பின்னர் தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை உறுதி செய்து மேற்கொண்டு இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply