அதிபர்கள் ஆசிரியர் சங்கங்களுக்கு, அமைச்சரவை உப குழுவினருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
இந்நிலையில் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாட்டைத் தீர்ப்பது குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆசிரியர் அதிபர் சங்கங்களுக்கும் , அமைச்சரவை உபகுழுவுக்கும் இடையில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற விருந்த நிலையில் இன்று வரை பிற் போடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்திப்பானது இற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



