வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தீர்மானம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான வயது 17லிருந்து 18 ஆக அதிகரிப்பது குறித்தது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகார சபையின் தலைவர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள் ஆகவே கருதப்படுகிறார்கள்
அவர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த காரணங்களை கருத்தில் கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லையினை 18 அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.



