இன்றும் கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய இந்த தடுப்பூசிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொட்டாஞ்சேனை சென் லூசியல் தேவாலயம் மற்றும் முகத்துவாரம், பொன் ஸ்டார் மைதானம் ஆகிய இடங்களிலே செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் கொவிட் 19 தடுப்பூசியினை பெறாது கொழும்பு நகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டோர் மேற்படி பிரதேசங்களில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளமுடியும் என்று காவல்துறை பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply