சில அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளஅதிபர்,ஆசிரிகள் சங்கங்கள்.

0

அதிபர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று சில அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த சங்கங்கத்தினர் இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து மேற்கொண்டு வரும் போராடடம்இன்றுடன் 32 வது நாளாகவும் தொடர்கின்றது.

தங்களுக்குரிய பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசிரியர் அதிபர்களின் வேதனை முரண்பாடுகளை நன்கு ஆராய்ந்து அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய இருந்தது.

மேலும் தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply