தற்போதைய பேருந்து நிலையங்களை நவீன மயப்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மக்கள் சேவையில் மாநகராட்சி, தமது சேவையில் நகராட்சி திட்டங்கள் மூலமாக எல்லோருக்கும் இணைய வழி சேவைகள் வழங்குவது உறுதி செய்யப்படும்.
அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், வரியற்ற பிற வருவாயை அதிகரிக்க தற்போதிருக்கும் சொத்துக்களின் மதிப்பை கூட்டுவதன் மூலம் வருவாயை வைத்து நவீன பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த அரசு தற்போதைய பேருந்து நிலையங்களை நவீனப் படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் ஆக தரம் உயர்த்தும் என்றும்
மேலும் திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் என்பன ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



