கொழும்பில் அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சில தொழிற்சங்கங்கள் இணைந்தது இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்,
இந்நிலையில் அதிபர் ஆசிரியர் சங்கத்தினர் தமது வேதன
முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு குறித்த
போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் இணைய வழிக் கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க போராட்டம் இன்றுடன் 31 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.



