இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல், சப்பிரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



