இரவு வேளைகளில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய குறித்த விடயத்தினை காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனுராதபுரத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் முச்சக்கர வண்டியின் சாரதியை தாக்கி அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் நாட்டிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



