முன்னிலை சோசலிச கட்சி நிர்வாக செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் கைது.

0

முன்னிலை சோசலிச கட்சி நிர்வாக செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்டமை மற்றும் மஹரகம காவல் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி தற்போது மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply