அனைத்து பாடசாலைகளையும் விரைவில் திறக்க தீர்மானம்!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் மூடப்படுள்ள அனைத்து பாடசாலைகளையும் முடிந்தளவு விரைவாக திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவர் குறித்த விடயம் தொடர்பில் பேசியிருந்தார்.

அத்துடன் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் முழுமையாக இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் தொலைதூரப் பகுதிகளில் அதாவது இணைய அணுக்கள் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரிய பிரச்சினை ஏற்படுகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பரீட்சைக்கு தோற்றவுள்ள
மாணவர்கள் யாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply