வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரியே தாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் சுமார் 150 நாட்களுக்கு மேலாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,
ஏற்கனவே யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொழும்பிற்கு வருமாறும் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பும் இடம்பெற்றது.
சந்திப்பின்போது குறித்த சுகாதார தொண்டர்களை ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்குள் உள் வாங்குவதாகவ தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தங்களுக்குரிய வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இன்று வரை மேற்கொள்ளப்படாததன் காரணமாக தாம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



