கெசல்கமுவ ஓய மற்றும் களனி கங்கை பகுதிகளை அண்டி வாழும் மக்களுக்கு விடுக்கப்பட அவசர தகவல்!

0

எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இடைக்கிடை திறக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திருத்தப் பணிகள் காரணமாகவே திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணத்தால் கெசல்கமுவ ஓய மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது.

ஆகவே குறித்த பகுதிகளை அண்டிய தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply