இனி வீட்டில் இருந்தவாறே பிறப்பு,இறப்பு மற்றும் விவாகப் பதிவுச் சான்றிதழ்கள்.

0

வீட்டில் இருந்தவாறே பிறப்பு,இறப்பு மற்றும் விவாகப் பதிவுச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்வதற்கு நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடு தலைமை பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சான்றிதழ்களை பெற விரும்புபவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் தங்களது விண்ணப்பங்களை ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அல்லது இணைய வசதியை கொண்ட கணினிஊடாக சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை வரவட்டை அல்லது கடன் அட்டை மூலமாக செலுத்துவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன .

மேலும் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர் பயனாளர் வழங்கும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும்.

குறித்த இணைப்பின் ஊடாக ஆகவே பொதுமக்கள் விரும்பும் பிரதிக்கான கட்டணங்களை செலுத்த முடியும்.

அத்துடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த முறைமையினம் மூலம் பிறப்பு இறப்பு மற்றும் பதிவுச் சான்றிதழ் பதவிகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் https://online.ebmd.rgd.gov.lk/ என்ற தலைமை பதிவாளர் திணைக்களத்தின் இணைய முகவரி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply