பளையில் உள்ள இலங்கை வங்கி கிளையில் தொழில் புரியும் 6 ஊழியர்களுக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வங்கிக்கு சென்று வந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் ஒருவருக்கு இரண்டாம் தடவை பி. சி. ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இந்த வங்கியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தி உதவுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



