யாழில் கொவிட் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்படு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிககரித்து வருகின்ற நிலையில் யாழில் மேலும் ஒருவர் கொவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் யாழ் மாவட்டத்தில் இன்றுவரை கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply