யாழ் மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றிய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழகம் மற்றும் லயன்ஸ் கழகம் இணைந்து மேற்கொண்ட இரத்ததான முகாம் இன்று இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாகவுள்ள லொயலாஸ் திருமண மண்டபத்தில் குறித்த குருதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
இதன் போது பலரும் ஆர்வத்துடன் இரத்ததானத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர், இளைஞர் சேவைகள்உத்தியோகத்தர், யாழ்ப்பாண லயன்ஸ் கழகத் தலைவர், யாழ் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ,பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர்,கே.கே.பி கழக செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



