நாட்டை வந்தடைந்த மேலும் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள்!

0

மேலும் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இதற்கமைய சீனாவிடமிருந்து தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இது 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

அத்துடன் இதுவரை காலமும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகரிக்கப்படுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளில், குருநாகல் மாவட்டத்திற்கு 4 லட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்திற்கு 275,000 தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை இரத்தினபுரி. ஆகிய மாவட்டத்திற்கு தலா 2 லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன..

அத்துடன் குறித்த சைனோபார்ம் தடுப்பூசிகளில் புத்தளம், பொலனறுவை, நுவரெலியா, பதுளை,மொனராகலை,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் தடுப்பூசிகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 125,000 தடுப்பூசிகளும் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜசுமன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply