பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி யாழ் மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைய குறித்த விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாவற்குழியில் ரஜமஹா விகாரையின் கோபுரத்தை திறந்துவைக்கப்படவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமைகளை பயனாளர்களுக்கு வழங்குவதுடன், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காங்கேசன் துறைக்கு செல்லவுள்ள பிரதமர், காங்கேசன்துறை திஸ்ஸ மகா விகாரையின் பிக்குமாருக்கானா விடுதி திறப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு குடும்பங்கங்களுக்கு வீடுகளையும் கையளிகவுள்ளார்.
பின்னர் வேலனைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 100 நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலனை பகுதியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மேலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் நயினாதீவு நாக விகாரை ஆகியவற்றில் பிரதமர் மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அவ்வாறு நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ் நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார் பிரதமர், தாளையடி நீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



