ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு எதிராக, உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர வின் மகளும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர வின் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை அரசியலமைப்புக்கு விரோதமான செயற்பட அறிவிக்கக் கோரி ஹிருணிகா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியினால் முன்வைத்துள்ள உத்தரவை ரத்து செய்யுமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



