நாடு பூராகவும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மற்றும் ஊரடங்கு சட்டம் காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பகங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட கொடுப்பனவில் சில மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஒரு சிலருக்கு 5000 ரூபா மாத்திரமன்றி அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் டபிள்யூ. பி. டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்
இந்நிலையில்முதல் தடவை 5000 ரூபா பணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களின் பணமும் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்த அறிக்கையை விரைவில் நாடாளுமன்றில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



