நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தளர்த்தப்பட்டது.
ஆனால் மீண்டும் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.



