தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் குறித்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் , சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் இந்த கலந்துரையாடலில் கேரளா,கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா முதலமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
அவ்வாறு தமிழகம் உட்பட 6 மாநில அரசுகள் எடுத்து வரும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மேலும் இந்தத் தளர்வுகளால் கொவிட் தொற்றானது அதிகரிக்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடியி ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



