முஸ்லீம்கள் பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய குறித்த வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவின் வழிகாட்டுதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிக்கையில் பள்ளிவாசல்களில் தொழுகையின் போது ஒரே நேரத்தில் 100 பேருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தேவையற்ற வகையில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



