பளை பகுதியில் இன்றையதினம் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த விபத்து சம்பவம் முச்சக்கர வண்டியும் கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் விபத்துக்குள்ளான நிலையில் பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பழைய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



