நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கு செய்யப்பட்ட ஆய்வுகளை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் ஆய்வு செய்துள்ளார்.
இதற்கமைய குறித்த கூட்டத் தொடர் ஜூலை 19-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13-திகதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்,
அத்துடன் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் 18 திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.



