வத்தளை பகுதியில் காவற்துறை அதிகாரிகள் போன்று வேடம் பூண்டு கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த நபர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அட்டைகளை காண்பித்து பொதுமக்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் மற்றும் வத்தளை – சேதுவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த நபர்கள் காவல்துறையினரால் கைது செயப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.



