இரத்தினபுரி பலாங்கொடை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் நோயாளி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதற்கமைய அவிசாவளை- கொஸ்ஹேன்கம, ஹேவாயின்ன பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நந்தசிறி போவத்த என்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
த்துடன் குறித்த நபர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு உரித்தான பகுதியில் இருந்த போதும் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியதில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு தப்பி ஓடிய நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



