வெயில் காலத்தில் ஏற்படும் கடுமையான தாக்கத்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
இதன் காரணத்தினால் கண்கட்டி உண்டாகுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
கண்ணின் இமை மற்றும் கீழ் பகுதியில் வரும் கட்டி கண்ணில் வலி மற்றும் உறுத்தலை ஏற்படுத்தும்.
ஆகவே இப்படிப்பட்ட நோயை எளிதில் குணப்படுத்துவதற்கான ஒரு சில சிறந்த வழிமுறைகளை பார்ப்போம்:
அகத்திக்கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் வராது.
அகத்திக் கீரையை அரைத்து அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் உடல் சூடு குறையும்.
அத்துடன் முருங்கைக்கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் கண்கட்டி வராமலும் தடுக்கலாம்.
உருளைக்கிழங்கு தோளை சீவி அதனை கண்களில் சில மணி நேரம் வைத்தால் கட்டி கரையும் .
வெந்நீர் உப்பு கலந்து அந்த நீரைக் கொண்டு கண்களில் ஒத்தனம் கொடுக்கலாம்.
மேலும் காலையில் எழுந்தவுடன் கண்களை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
