பொதி சேவை மூலம் போதைப்பொருள் விநியோகம்- பெண்ணொருவர் அதிரடியாகக் கைது!

0

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பெண் கொம்பனித் தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பெண் நாடு முழுவதும் இந்த பொதி சேவை மூலம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply