தாய்லாந்து போன்ற சில நாடுகளில் இரண்டு வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளத்தில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் கொவிட் தொற்றுக்கு 2 இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தினால் சரியான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.
இப்போது குழப்பமான நிலையில் இரண்டு வெவ்வேறு நிறுவனத்தில் ஊசிகளை போட்டு கொள்ளலாம் என்று சில அரசு செய்வது சில சமயம் ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் இரண்டு ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட்ரோஸ் அதானம் அவர்களும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதாவது கொரோனாவுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை.
அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மீதியாக உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகளவில் கொவிட் இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில் , இந்த டெல்டா வகைத் தொற்றால் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
ஆகவே தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவை திட்டத்திற்கு குறித்த தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
