நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தன்மைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா ,கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கம்பஹா மாவட்டத்தின் வத்தளை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த பிரதேசமும் , ரபர் வத்த பிரதேசமும்
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவும்
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மஞ்ச தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஜின்னா வீதியும் இவ்வாறு தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



